மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் டிராவல்ஸ் ஊழியர் போக்சோவில் கைது

கோவை, பிப்.3: கோவை நகரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன் (26). இவர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கே வந்த 17 வயதான கல்லூரி மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த மாணவியிடம் செல்போன் எண் வாங்கிய வேல்முருகன் அடிக்கடி பேசினார். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் போட்டோ, தகவல் அனுப்பி வந்தார். பின்னர் இவர் காதலிப்பதாக கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். கடந்த 27ம் தேதி வெளியே போகலாம் எனக்கூறி மாணவியை அழைத்தார். அவர் வந்தபோது அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்றார். ‘‘இனி நீ கல்லூரிக்கு போக வேண்டாம், நாம் திருமணம் செய்யலாம்’’ என சொல்லி கோயிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டினார். அவரை தூத்துக்குடியில் ஒரு வீட்டில் தங்க வைத்தார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என கோைவ கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து வேல் முருகனை மீது சிறார் பாலியல் பலாத்கார பிரிவில் வழக்குப்பதிவு ெசய்யது கைது செய்தனர்.

Related Stories:

>