×

இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

 

வாஷிங்டன் டி.சி.,: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் முக்கிய தாதுக்கள் தொடர்பான அமைச்சரவை மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் நடந்த சந்திப்பின்போது, 2 நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசினேன்.

அவருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. நம்முடைய நாடுகளின் உறவுகளை முன்னோக்கி எடுத்து செல்வது பற்றி பேசினோம். இதேபோன்று, பெரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ டி ஜெலாவையும் சந்தித்து பேசினேன். அப்போது, இரு நாடுகள் தொடர்பான நம்முடைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினேன்’ என்றார்.

Tags : Jaisankar ,Minister of Canada ,Washington D. C. ,Washington, D.C. ,USA ,EU ,Foreign Minister ,India ,
× RELATED நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு; 162 பேர் பலி