×

இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு பிப்.11ம் தேதி தமிழகம் வருகை!

 

டெல்லி: இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு பிப்.11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ல் வெளியிடப்படும் நிலையில் துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

இம்மாதம் 17ம் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு பிப்.11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

 

Tags : Indian Deputy Election Commissioner ,Banu Prakash ,Tamil Nadu ,Delhi ,Deputy Election Commissioner ,Tamil Nadu Assembly Election ,
× RELATED தமிழகத்தின் சிறந்த கைவினைஞர்களுக்கு...