×

வடசேரி காவல் நிலையம் எதிரில் திடீர் பிள்ளையார்

நாகர்கோவில், பிப்.2 : நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அருகே வடசேரி காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் எதிரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் இயங்கி  வருகிறது. இந்த அலுவலக வாயிலில் யாரோ சிமென்ட்டால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வைத்து உள்ளார். அந்த பகுதியில் உள்ள சிலர் இதற்கு அங்கவஸ்திரம் அணிவித்து வழிபாடும் நடத்தி உள்ளனர். கிருஷ்ணன்கோயிலுக்கு வரும் பக்தர்களும் இதை வழிபட்டு செல்கிறார்கள். காவல் நிலைய பகுதியில் குற்றங்கள் குறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரோ திடீர் பிள்ளையாரை வைத்து விட்டு சென்றுள்ளனர் என அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறினர்.

Tags : Pillaiyar ,police station ,Vadacherry ,
× RELATED புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து...