- திமுக எம்.எல்.ஏ.
- அஇஅதிமுக
- நெய்வேலி
- சபா
- ராஜேந்திரன்
- அமல்ராஜ்
- இந்திரா நகர், நெய்வேலி, கடலூர் மாவட்டம்
- திமுக
நெய்வேலி: திமுக எம்எல்ஏ சபா.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ், திமுக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர். இவர் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், கோரணப்பட்டு ஊராட்சி சத்திரம் கிராமத்தை சேர்ந்த மூவராகவ மூர்த்தி மகன் ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி.
இவரது முகநூலில் நெய்வேலி சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ பற்றி பொய்யான செய்தியையும், உண்மைக்கு புறம்பான சம்பவங்களையும் வீடியோ பதிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் லட்சுமிகாந்தன் என்பவரும், எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். இது பற்றி கேட்ட தன்னையும், எம்எல்ஏவையும் திட்டி மிரட்டியதாக கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில், ராதாகிருஷ்ணன், லட்சுமிகாந்தன் ஆகிய 2 பேர் மீதும் நெய்வேலி நகர போலீசார் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
