×

பங்குச்சந்தை மோசடி அமெரிக்காவின் சம்மனை வாங்க அதானி ஒப்புதல்

நியூயார்க்: இந்தியாவில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மின்கொள்முதல் ஒப்பந்தம் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாகவும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் கடந்த 2024 நவம்பரில் மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம் சம்மனை ஏற்க மறுத்தது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக சம்மன் தர முடியாமல் சமீபத்தில் இமெயில் மூலம் சம்மன் அனுப்ப நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் சம்மனை ஏற்க குழும தலைவர் கவுதம் அதானியும், அவரது மருமகன் சாகர் அதானியும் ஒப்புக் கொண்டுள்ளனர். 90 நாளில் நீதிமன்றத்தில் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

Tags : Adani ,US ,New York ,India ,Adani Green Energy ,US Securities and Exchange Commission ,
× RELATED தைப்பூசத்திற்கு ‘வாழ்த்து’ சொன்ன சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்