×

அண்ணா 57வது நினைவு நாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி: சென்னை மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

சென்னை: அண்ணா 57வது நினைவு நாளையொட்டி வரும் பிப்.3ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் அண்ணா 57வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முன்னணியினர் பிப்ரவரி – 3, செவ்வாய்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ளஅண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

திமுக இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் அண்ணா நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : Anna ,Chief Minister ,MK Stalin ,Chennai District Secretaries ,Chennai ,Chennai District DMK Secretaries ,South… ,
× RELATED திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய...