×

காவேரிப்பட்டணத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி

காவேரிப்பட்டணம், ஜன.30: காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி சார்பில் ரூ.5.90 லட்சத்தில் பேவர்பிளாக் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகி செந்தில்குமார், பேரூராட்சி தலைமை எழுத்தர் வெங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகர், சோபன்பாபு, சிவா, சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Kauverypatnam ,Bhoomi Puja ,Panchayat ,Amsaveni Senthilkumar ,
× RELATED அசாம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை