ஓசூர், ஜன.30: சூளகிரி பேருந்து நிலையத்தில், நேற்று மாலை சிறப்பான தூய்மை இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசின் தூய்மை பாரத அபியான் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கு ஆகியவற்றின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்து, இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. தனியார் நிறுவனம் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ், கிரீன் டிரீம் பவுண்டேஷன் இந்த விழிப்புணர்வு பணியை செயல்படுத்தியது. இதில் பல்வேறு துறைத்தலைவர்கள் தலைமையில் ஏராளமான தன்னார்வலர்கள் தூய்மை பணியில் பங்கேற்றனர். அவர்கள் பேருந்து நிலைய பகுதியில் தேங்கிக் கிடந்த குப்ைப கழிவுகளை அகற்றியதுடன், கழிவுகளை அவற்றின் மூலத்திலேயே பிரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த குழுவினர் உள்ளூர் உணவு விற்பனையாளர்களை நேரில் சந்தித்து, குப்பை கழிவுகளை முறையாக அகற்றுவது மற்றும் குப்பை தொட்டிகளை சரியாக பயன்படுத்துவது குறித்து விளக்கினர்.
