×

குளித்தலை தேவதானம் ரயில்வேகேட் அருகே பாசன வாய்க்காலில் ஓடிய பால்

குளித்தலை, ஜன. 29: குளித்தலை தேவதானம் ரயில்வே கேட் அருகில் தென்கரை கிளை பாசன வாய்க்காலில் திடீரென பால்போல் வெண்மை நிறத்தில் வழிந்து ஓடிய தண்ணீரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை தென்கரை வாய்க்கால் உள்ளது. இவ் வாய்க்காலில் இருந்து பல்வேறு பிரிவு வாய்க்கால்கள் செல்கிறது. அதில் ஒரு பிரிவு வாய்க்கால் கரூர் மெயின் ரோட்டில் இருந்து தேவதானம் ரயில்வே கேட் வழியாக பல்வேறு பாசன விவசாய நிலங்களுக்கு இந்த பிரிவு வாய்க்கால்கள் செல்கிறது.

இந்நிலையில் நேற்று காலை தேவதானம் ரயில்வே கேட் அருகே பிரிவு பாசன வாய்க்காலில் திடீரென குபு குபுவென வெண்மை நிறத்தில் பால் போல் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வழி வழிந்தோடியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அது பார்த்ததும் அருகில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர். இது ஏன் எதனால் இதுபோன்று வெண்மை நிறத்தில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து வருகிறதா என்பது தெரியவில்லை இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Kulithalai Devadanam Railway Gate ,Kulithalai ,Thenkarai ,Thenkarai canal ,Karur district ,
× RELATED செட்டிக்குளம் பகுதியில் புதிய ரக சின்ன வெங்காயம் சாகுபடி