×

செட்டிக்குளம் பகுதியில் புதிய ரக சின்ன வெங்காயம் சாகுபடி

பாடாலூர், ஜன.29: பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் முக்கிய பணப்பயிராக உள்ளது. சுமார் 5900 முதல் 800 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக ஆலத்தூர், பெரம்பலூர் ஒன்றியங்களில் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. 60 முதல் 70 நாட்களில் கொண்ட இப்பயிரை, ஆண்டுக்கு 3 முறை கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவ்வாறு சாகுபடியில் கிடைத்த வெங்காயங்களை கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-துறையூர் செல்லும் சாலை பகுதியில் புதிய ரக சின்ன வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்த புதிய ரக சின்ன வெங்காயத்தில் நுனிப் பகுதியில் தற்போது பூ பூத்து உள்ளதால், தற்போது அந்த பகுதி முழுவதும் வெளிநாட்டை போல அழகாக காட்சியளிக்கிறது.

 

Tags : Chettikulam ,Perambalur district ,Alathur ,Perambalur ,
× RELATED குளித்தலை தேவதானம் ரயில்வேகேட் அருகே பாசன வாய்க்காலில் ஓடிய பால்