×

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய் அலுவலர்கள் கலெக்டரிடம் மனு

கரூர், ஜன. 29: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப்பணியிடத்தை நிறப்பக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஒஏ காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டேப்ஸ் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனு அளித்தனர்.

 

Tags : Revenue ,Karur ,Tamil Nadu Revenue Officers Association ,Mohanraj ,Karur Collector ,OA… ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தல்