×

சுத்திகரிப்பு நிலையங்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதிப்பு

திருப்பூர், ஜன.30:  திருப்பூரில் 407 சாய ஆலைகள் இணைந்து, கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக 18 பொது சுத்திகரிப்பு மையங்களை (சி.இ.டி.பி.) செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் ஆறு மையங்களை மட்டும் அரசு சார்பு நிறுவனமான தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் இயக்கி வருகிறது. கடந்த 2020 டிச.10ல், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு மையங்களும் நீர் முதலீட்டு நிறுவனம் மூலம் ‘ஒன் சிட்டி’ ஒன் ஆபரேட்டர்’ என்ற அடிப்படையில் இயக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர் காந்திராஜன், இணை செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, இந்தக் கட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,நீர் முதலீட்டு கழகம் மூலம் இயங்கினால், சுத்திகரிப்பு மையங்களுக்கு செலவு பல மடங்கு உயர்ந்துவிடும்.

நீர் முதலீட்டு கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் போது, அனைத்து மையங்களிலும் ஒரே தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டியிருக்கும். புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதற்காக பெருந்தொகை செலவிடவேண்டி வரும். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்’ என்றனர்.

Tags : refineries ,
× RELATED அரசு நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு