×

தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

ஊட்டி, ஜன. 30: காந்தியடிகளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நேற்று அரசு அருலுவலங்களில் தீண்டாமை உறுதி மொழி ஏற்கப்பட்டது. காந்தியடிகள் நினைவு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இம்முறை ஜனவரி 30ம் தேதி வார விடுமுறை நாளான சனிக்கிழமை இன்று வரும் நிலையில், நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அரசு அதிகாரிகள் அனைவரும் தீண்டாமை உறுதிெமொழி ஏற்றனர். இதே போன்று, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags :
× RELATED சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன