- விரியம்பட்டி கூட்ரோட்
- ஓதங்கரே
- மாவட்ட கலெக்டர்
- தினேஷ் குமார்
- வீரியம்பட்டி குட்ரோட்
- தேசிய நெடுஞ்சாலை
- ஓதங்கரா
- கிருஷ்ணகிரி
- டி.கள்.
- இரத்த அழுத்தம்
- சைனிவாசன்
- தேசிய
ஊத்தங்கரை, ஜன.28: ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில், தொடர் விபத்து நடந்து வருவதால், விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்பேரில், ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி -திண்டிவனம் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் மற்றும் உதயகுமார், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஊத்தங்கரை உதவி செயற்பொறியாளர் நேதாஜி ஆகியோர் கூட்ரோடு பகுதியில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். பிரிவு சாலை என்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
