×

கோழிக்கழிச்சல் நோய்க்கு பிப்.1 முதல் தடுப்பூசி முகாம்

தஞ்சை, ஜன.29: தஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.1ம் தேதி முதல் 14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெறும் இம்முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தகுதியாக உள்ள கோழிகளுக்கு ஊசி போடப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கோழிக்கழிச்சல் நோயால் கிராம பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் ஆண்டுதோறும் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் 2.92 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து கோழி வளர்ப்போர்களும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Vaccination camp ,
× RELATED இன்று உலக வெறி நோய் தடுப்பு தின தடுப்பூசி முகாம்