×

ஆலவயல், செவலூர் விலக்கில் இன்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பிரசாரம்

பொன்னமராவதி, ஜன. 29: பொன்னமராவதி அருகே ஆலவயல் மற்றும் செவலூர் விலக்கில் இன்று (29ம் தேதி) காலை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசுகிறார். விடியலை நோக்கி ஸ்டாலின் குறல் என்ற தலைப்பில் திருமயம் தொகுதியில் உள்ள பொன்னமராவதி அருகே ஆலவயலில் இன்று காலை 9 மணிக்கும், செவலூர்விளக்கில் காலை 10 மணிக்கும் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திருமயம் எம்எல்ஏ ரகுபதி, ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, முத்து மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Kanimozhi MP ,DMK Women ,campaign ,Sevalur ,
× RELATED இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து...