×

அரசு அலுவலகங்களில் நடக்கும் முற்றுகை போராட்டங்களை தடுப்பது எப்படி?

பெரம்பலூர்,ஜன.29: அரசுத்துறை அலுவலகங்கள் முற்றுகை, ஆர்ப்பாட்டங்களை முன்கூட்டியே தடுப்பதற்காக போலீசாரின் ஒத்திகை பெரம்பலூரில் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள் முன் காவல்துறையின் அனுமதிஇன்றி வன்முறை ஏற்படும் விதத்தில் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் திடீர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் முன்னிலையில், பெரம்பலூர் சட்டம்-ஒழுங்கு டிஎஸ்பி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், இன்ஸ்பெக்டர்கள் பெரம்பலூர் பால்ராஜ், டிராபிக் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தமிழ்ச்செல்வி, ராம்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, சக்திவேல் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆயு தப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

இதற்காக பாலக்கரை ரவுண்டானா பகுதியில் பழைய பஸ்டாண்டு நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந் த வாகன ஓட்டிகளை போலீசார் மறித்து அழைத்து வந்தனர். ஆஹா ஹெல்மெட் போடாததற்குதான் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள் எனநினைத்து, நிறுத்தப்பட்ட பலரும் பயத்தில் இருந்தனர். பின்னர் அவர்களிட ம் பேசிய டிஎஸ்பி சரவணன், அனுமதியின்றி கலெக் டர் அலுவலகத்தை முற்று கையிடுவோரைத் தடுத்து நிறுத்தத்தான் இந்த ஒத்தி கை, நீங்கள் போலீசாரின் தடையை மீறிச் செல்வது போல நடிக்க வேண்டும் எனக் கூறினார். இதனால் பயம் தெளிந்த பைக் ஆசாமிகள், இப்பப் பாருங்கசார் எங்கநடிப்பை எனக்கூறி போலீசார்அமை த்திருந்த பேரிகாட்தடுப்பை தடதடவெனத் தள்ளிக்கொ ண்டு சென்றனர். பின்னர் போலீசாரிடம் கேட்டபோது, நாளை(இன்று)பெரம்பலூ ரில் பாமக கட்சியினர், இட ஒதுக்கீடு பிரச்சனை தொட ர்பாகக் கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட வருகிறார்கள், அதற்கான ஒத் திகைதான் இதுவென்று தெரிவித்தனர்.

Tags : siege protests ,government offices ,
× RELATED அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்