திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான சீனியர் எறிபந்து

கரூர், ஜன. 29: மாநில அளவிலான சீனியர் எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் அரசு கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் உட்பட அனைவரும் பாராட்டினர். மாநில அளவிலான சீனியர் எறிபந்து போட்டி திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கரூர் மாவட்ட அணி முதலிடமும், திண்டுக்கல் அணி 2ம் இடமும், தூத்துக்குடி மூன்றாமிடமும், நீலகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த கரூர் அணியில் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற அணியில் இடம் பிடித்த மாணவர்களை, கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>