×

நகரி - திண்டிவனம் இடையே புதிய ரயில்பாதை: ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு கோரிக்கை

காஞ்சிபுரம்: நகரி - திண்டிவனம் இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாசிடம், சென்னை ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் தமிழ்செசல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த பொதுமேலாளருடன், ரயில்வே டிஆர்எம் மகேஷ், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் புருஷோத்தமன், அரவிந்த் ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு - அரக்கோணம் மார்க்கத்தில் தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலூர் வழியே 75 கிமீ தூரத்துக்கு கூடுதலாக புதிய ரயில் இணைப்பு பாதை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் அடுத்த கூரம் கேட் பருதியில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

சென்னை கோடிடத்தில் நகரி - திண்டிவனம் மார்க்கத்தில் தெள்ளார், வந்தவாசி, செய்யாறு, கலவை, ஆற்காடு, நகரி வரை புதிய ரயில் இணைப்பு சாலை 100 கிமீ தூரத்துக்கு அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருவள்ளூரில் புதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும். சென்னை - மைசூர் செல்லும் சதாப்தி விரைவு ரயில், அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை சந்திப்புகளில் 1 நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Rail Passenger Advisory Committee ,
× RELATED நகரி - திண்டிவனம் இடையே புதிய...