சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதாக ஐஜி மகேஸ்வரி உள்பட 3 பேரக்கு ‘குடியரசு தலைவர் பதக்கம்’ மற்றும் 21 அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் என மொத்தம் 24 அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் கவுரவிப்பது வழக்கம்.
அதன்படி இன்று ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதாக காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜி மகேஸ்வரி, சென்னை பரங்கிமலை ஆயுதப்படை துணை கமிஷனர் அன்வர் பாஷா, லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் குமரவேல் ஆகிய 3 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘குடியரசு தலைவர் பதக்கம்’ அறிவித்துள்ளது. அதேபோல் மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள் மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான பதக்கங்கள் ஒன்றிய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 21 காவல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சத்தின் ‘தகைச்சால் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் ஆணையர்கள் மேற்கு மண்டல ஐஜி சரவண சுந்தர், சேலம் மாநகர கமிஷனர் அனில் குமார், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் 5ம் அணி தளவாள் மணிவர்ணன், சென்னை பெருநகர ஊர்க்காவல் படை கூடுதல் துணை கமிஷனர் அமுல்தாஸ், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், டிஎஸ்பி பேசில் சீனிவாசன், சென்னை தகவல் தொடர்பு டிஎஸ்பி தேவராஜன், திருப்பூர் மாநகர உதவி கமிஷனர் ஜான்,
ஆவடி காவல் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மணிவண்ணன், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி, ஆவடி மாநகர பூந்தமல்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, வேலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் விஜய், தஞ்சை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் லக்குமணன், தாம்பரம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சென்னை க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன், திருநெல்வேலி மாநகர, நகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி,
சென்னை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரா, தமிழ்நாடு அதிதீவிரப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சென்னை, பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு உதவி அய்வாளர் முருகன் அகிய 21 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றியதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆண்டவராஜ், ஆறுமுகம், பொன்னுசுாமி, சுரேஷ்குமார் தீயணைப்பு வீரர் இளங்கோவன் ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சீர்திருத்த சேவைக்கான பதக்கங்கள் தமிழ்நாடு சிறை துறையில் சிறப்பாக பணியாற்றியதாக உதவி சிறை அலுவலர் பொன் பகவத் சிங், செல்லதுரை, சிவகாமி ஆகியோருக்கு உள்துறை அமைச்சம் பத்தககம் அறிவித்துள்ளது.
