×

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை: பிரேமலதா பேட்டி

 

 

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்; தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம். எல்லோரும் தொகுதி அறிவித்துவிட்டார்கள். வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார்கள் என கேட்கிறீர்கள் தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை. என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை; தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன். தேமுதிக எங்களது குழந்தை. அவங்களுக்கு என்ன, எப்போது நல்லது பண்ணனும்னு ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகமாக இருக்கு. உரிய நேரத்தில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் கூறினார்.

Tags : Tamil Nadu ,D. ,Premalatha ,D. A. ,Chennai Airport ,Demutika ,Secretary General ,Premalatha Vijayakanth ,Thoothukudi ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி...