×

மக்காச்சோளம், ரேஷன் அரிசி வருகை

நாமக்கல், ஜன. 29: வெளிமாநிலங்களில் இருந்து, நாமக்கல்லுக்கு 1,300 டன் மக்காச்சோளம் மற்றும் 2,600 டன் ரேஷன் அரிசி ஆகியவை நேற்று சரக்கு ரயில் மூலம் வந்தது. கோழித்தீவனத்திற்கு பயன்படும் மக்காசோளம் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து 21 பெட்டிகளில் 1,300 டன் நேற்று நாமக்கல் வந்தது. இவை 53 லாரிகளில் ஏற்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல்,  தெலங்கானா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு நேற்று வந்தது. இந்த அரிசி மூட்டைகள் என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு 121 லாரிகளில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Maize ,ration rice visit ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு