கிருஷ்ணராயபுரம், ஜன. 24: கிருஷ்ணராயபுரம் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை மர வெண்பட்டு சிலந்தி பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரம், நத்தமேடு கிராம பகுதியில் முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் அகல்யா, அஸ்வினி, பாலமுனீஸ்வரி, பார்கவி, பவனிஷா, பூமா, சந்தியா, தீபா ஆகியோர் தென்னை மர வேர் ஊட்டுதல் முறை, வெண் பட்டு சிலந்தி பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் தென்னையில் கொப்பரா கிழங்கு, இளநீர், தேங்காய்களின் வடிவம் பாதிக்கப்படுவதற்கு வெண் பட்டு சிலந்தி முக்கிய காரணமாகும். இதனை கட்டுப்படுத்த தென்னை மர வேர் ஊட்டுதல் முறை ஒரு பயனுள்ள தொழில்நுட்பம் என மாணவிகள் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கி கூறினர்.
