×

லாரி மோதி வியாபாரி காயம்

ஆண்டிபட்டி, ஜன.29: ஆண்டிபட்டி அருகே கருப்புத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம்(55). பால் வியாபாரி. ராஜாங்கம் நேற்று முன்தினம் பால் வியாபாரத்திற்காக சென்றார். அப்போது டி.சேடபட்டி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி ராஜாங்கம் பலத்த காயமடைந்தார். அவரை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,collision dealer ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை