×

ஜன.31ம் தேதி முகாமில் 1.32 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு

சிவகங்கை, ஜன.29:  சிவகங்கை மாவட்டத்தில் ஜன.31ல் 1 லட்சத்து 32 ஆயிரத்து 802 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜன.31ல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நகர் நல மையம், அங்கன்வாடி, பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 192 நிரந்தர மையங்கள், 61 நடமாடும் மையங்கள், 17 பஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட ஆயிரத்து 270 மையங்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 32 ஆயிரத்து 802 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.  

இதில் சுகாதாரம், மருத்துவம், சமூக நலம், கல்வி, வருவாய், சத்துணவு, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி, தனியார் துறை சார்ந்த 5 ஆயிரத்து 80 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் இம்முறை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். மருந்துகளை அனைத்து மையங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் அனைத்து துறைசார்ந்த வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க கட்டாயம் முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,camp ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...