×

ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்களுக்கு அனுமதி எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

மதுரை, ஜன. 29: வழக்கு முடிவுக்கு வந்தப்பின் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மகால் முன் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருமலை நாயக்கர் மகால் முன் உள்ள சிலையை வெண்கலச் சிலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவ அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், பொதுமக்களுக்கு தற்போது அனுமதி இல்லை. வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அடுத்தகட்ட விபரம் ெதரியும். ஏற்கனவே ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் வாழ்ந்த வீடுகளை நினைவு இல்லமாக அரசு மாற்றியுள்ளது. அதேபோன்று ஜெயலலிதா வாழ்ந்த வீடும் மாற்றப்பட்டுள்ளது. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னரே வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Jayalalithaa ,Kadampur Raju ,Veda Illam ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்