விருதுநகர்: சாத்தூர் அருகே சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் சிறை காவலர் லெனின் உயிரிழந்தார். சென்னையிலிருந்து திசையன்விளை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்துகுள்ளானது. விபத்தில் லெனின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
