தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

ஊட்டி,ஜன.29:  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், தேர்பவனி ஆகியவை நடந்தது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருக பெருமான் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் தேர் பவனி நிகழ்ச்சி நடந்தன. ஊட்டியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு திருத்தேர் பவனி நடந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கோயிலில் இருந்து எல்க்ஹில் விநாயகர் கோயில் வரை தேர் சென்றது. பின் அங்கிருந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தது.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருக பெருமானை தரிசித்து சென்றனர். இதேபோன்று லோயர் பஜாரில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். காந்தல் காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் கோயிலும் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். எச்பிஎப்., பகுதியில் உள்ள முருகன் கோயில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள், தேர்பவனி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

Related Stories:

>