×

பகலில் மேய்ச்சல் நிலமான பூங்கா இரவில் சமூக விரோதிகள் கூடாரமானது

ஊட்டி, ஜன. 29:ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவிஸ் பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், பகலில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி, ஏராளமான சிறிய பூங்காக்களும் உருவாக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. இதில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவிஸ் பூங்காவும் முக்கியமான ஒன்று.

இப்பூங்கா பல ஆண்டுகளாக முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இடையில் பராமரிக்க தவறவே, அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து மீண்டும் இப்பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்பட்டது. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். மேலும், உள்ளூர் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 10 சில ஆண்டுகளாக இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாத நிலையில், மீண்டும் பூங்கா பொலிவிழந்தது. தற்போது பகல் நேரங்களில் கால்நடைகள் மேய்ச்சல் நிலமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பயன்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் இதனை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்ட போதிலும், வேலிக்கு மட்டும் பெய்ண்டிங் அடித்து கணக்கு காட்டி முடித்துவிட்டனர். பூங்காவை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் அக்கரை காட்டவில்லை. இதனால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இதனை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : park ,
× RELATED தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கும் பணி மும்முரம்