×

கவுண்டம்பாளையம் பகுதி திமுக சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை, ஜன. 29:  கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக, கவுண்டம்பாளையம் பகுதிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, குடியரசு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள டி.வி.எஸ்.நகரில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கவுண்டம்பாளையம் ஜவஹர், இளைஞர் அணி சரத் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர், 1,000க்கும் ேமற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.  

விழாவில், மாவட்ட திமுக நிர்வாகிகள் மதியழகன், டி.பி.சுப்பிரமணியம், ரகுபதி, கே.எம்.சுந்தரம், தியாகராஜன், வெ.நா.பழனியப்பன், ஜோதிபாசு, அருள்குமார், வேலுச்சாமி, ஸ்ரீதர், சங்கர், தம்பு, ஈஸ்வரன், காளிதாஸ், கிருஷ்ணமூர்த்தி, துரை, தம்பான், கண்ணகி, தமிழ்செல்வன், குமரேசன், வெற்றிவேல், தன்ராஜ், சண்முகம், மைக்கேல், மாலதி, வேலுமணி, மருதாசலம், அரசூர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,area ,Countampalayam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்