×

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்து

கோத்தகிரி, ஜன.22: கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை கிராமம் குன்னூர் உதகை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரமோத்கோஷி (56) என்ற நபர் கட்டபெட்டு பகுதியில் இருந்து கோத்தகிரி நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது ஒரசோலை பகுதியில் வந்த போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் வந்ததாக கூறப்படுகிறது.

அச்சமயத்தில் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி பிரமோத்கோஷியின் கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணித்தவர்களும் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து தகவலறிந்த வந்த கோத்தகிரி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags : Kotagiri ,Orasolai ,Coonoor-Utthakara State Highway ,Pramodkoshi ,
× RELATED எஸ்ஐ, ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது