×

ஜாமீனில் வெளிவராத படி வழக்குப்பதிவு கண்டித்து திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன் விவசாயிகள் கோஷம்

திருவாரூர், ஜன 28: திருவாரூரில் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கினை கண்டித்து நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பாக விவசாயிகள் கோஷமிட்டனர். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.இதில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டம் துவங்கியவுடன் தமிழக விவசாய நல சங்கத்தைச் சேர்ந்த சேதுராமன், ராமமூர்த்தி முருகேசன் மற்றும் பிஆர் பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பழனிவேல் உட்பட விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருவாரூரில் நேற்று (நேற்று முன்தினம்) டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது. எனவே இந்த வழக்கு பதிவினை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து கலெக்டர் சாந்தா முன்பாக கோஷமிட்டனர்.

சுமார் 5 நிமிடங்கள் வரையில் இந்த கோஷம் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் கூட்டம் நடைபெற்றது.இதில் சேதுராமன் பேசுகையில், பயிர் பாதிப்பு களுக்காக அரசு அறிவித்த நிவாரண தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும். தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல் செய்யப்படுவதால் அதனை தடுக்க வேண்டும் என்றார். கலைவாணி மோகன் பேசுகையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் பல ஏரிகள் இருந்து வருவதால் அதனையும் தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும் அரசு அறிவித்தவாறு முழுமையான நிவாரணத்தொகைவிவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறந்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Tags : Collector ,grievance meeting ,Thiruvarur ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்