×

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.4500ம், கருணை குடும்ப ஓய்வூதியமாக ரூ.2250ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் ஓய்வூதியதாரர்களின் நிலையை அரசு பரிசீலித்து அதற்கேற்றவாறு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கருணை ஓய்வூதியத்தை ரூ.4500ல் இருந்து ரூ.5000ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2250ல் இருந்து ரூ.2500ஆகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இந்த கருணை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Milk Producers' Cooperative Union ,District Milk Producers' Cooperative Unions ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி...