சென்னை : ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி பாக்கியை செலுத்துமாறு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், 2 வாரங்களில் பதிலளிக்கவும் வருமான வரித்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
