×

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு: உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்ற மாற்று விமானத்தில் பயணம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பணியாளர்கள் “ஒரு சிறிய மின்சாரக் கோளாறை” கண்டறிந்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றொரு விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானத்தில் தனது பயனத்தை தொடர்ந்தார். இது ஒரு மாற்றியமைக்கப்பட்ட போயிங் 757 விமானமாகும், இது பொதுவாக அதிபரால் சிறிய விமான நிலையங்களுக்குச் செல்லும் உள்நாட்டுப் பயணங்களுக்குப் பயன்படும் விமானம் ஆகும். நள்ளிரவுக்குப் பிறகு சிறிது நேரத்தில், அவர் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்திற்கான தனது பயணத்தைத் தொடர்ந்தார். பரபரப்பான உலக அரசியல் சூழலுக்கு மத்தியில், உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்ற மாற்று விமானம் மூலம் அதிபர் ட்ரம்ப் பயணம் செய்தார்.

Tags : US ,President Trump ,World Economic Forum ,WASHINGTON ,PRESIDENT ,DONALD TRUMP ,ANDREWS ,SWITZERLAND ,
× RELATED வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்களை...