×

தைப்பூசத்தை முன்னிட்டு காவடி விற்பனை மும்முரம்

திருப்பூர், ஜன. 21: முருகனுக்கு விசேஷமான காலமான தைப்பூச தினத்தன்று முருகன் கோயில்களில் விசேஷ பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே திருப்பூரில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காவடி மற்றும் வேல் ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்.

தைப்பூச பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் திருப்பூரில் காவடிகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிய அளவிலான காவடி முதல் பெரிய காவடிகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இவை ரூ.1,100 முதல் 1,200 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான வேல், ஜோல்னா பைகள், ரிப்ளக்டர் உடை, ஸ்டிக்கர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வது அதிகரித்து வருவதன் காரணமாக வியாபாரம் சற்று அதிகரித்து இருப்பதாக தெரிவித்தனர்.

Tags : Thaipuṣat ,Kaawadi ,Tiruppur ,Murugan ,Tayusa ,Thaipuram ,Palani ,Thiruchendur ,
× RELATED உடுமலை தாசில்தாரிடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு