ஈரோடு,ஜன.21: சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இம்மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை (22ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சென்னிமலை நகர் முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம்,அம்மாபாளையம்,அசோகபுரம்,புதுப்பாளையம்,ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி,கே.ஜி.வலசு, பசுவபட்டி,முருங்கத்தொழுவு.
