×

கரூர்- வெள்ளியணை சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

கரூர், ஜன. 20: கரூர்-வெள்ளியணை சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல், மணப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளுககு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலையில் வெள்ளியணைக்கு முன்னதாக மணவாடி அருகே சாலையை ஒட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் கசிந்து செல்கிறது. இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே, முக்கியமான சாலையில் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அதனை சுத்தம் செய்வதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur- Viliyanai Road ,Karur ,Karur-Silyanai road ,Dindigul ,Manapara ,Vriani ,
× RELATED வாட்டி வதக்கும் பனிப்பொழிவு களை கட்டிய சுவட்டர் விற்பனை