கரூர், மார்ச் 12: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல்-2026 யை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு ஆகியோருக்கு பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றில் தினசரி சுழற்சி முறையில் தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி . ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா கரூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார்,
உதவி ஆணையர் கலால் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெகதீசன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
