×

மினி கிளினிக் திறப்பு

கமுதி, ஜன.28:  கமுதி அருகே ஒ.கரிசல்குளம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். இதில் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்
பழனியம்மாள்மூர்த்தி, ஊராட்சி தலைவர் ராஜாமணி, சுகாதார நலப்பணி துணை இயக்குனர் இந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. இதேபோல் கமுதி அருகே சடையனேந்தல் கிராமத்தில் மினி கிளினிக் துவங்கப்பட்டது.

Tags : Mini Clinic Opening ,
× RELATED ஆலாபுரத்தில் மினி கிளினிக் திறப்புவிழா