டெல்லி : வாக்குத் திருட்டு என்பது தேச நலனுக்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மக்களை திசைதிருப்புவதால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளது என்று வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைக்கப்படும் மை அழிவதாக வெளியான புகாரையடுத்து ராகுல்காந்தி இவ்வாறு குற்றம் சாட்டி உள்ளார்.
