×

காஞ்சிபுரத்தில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக நேற்று போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முறையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து, மனதில் உள்ள தீய எண்ணங்களை தூக்கி எறிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அதிகாலை முதல் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளான சின்னையங்குளம், மிலிட்டரி ரோடு போன்ற பகுதிகளில் சிறுவர், சிறுமியர்கள் மோளம் அடித்தும் போகிப் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படியும் கழிவுகளை தீ வைத்து எரிப்பது, சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிக்க தடை பெய்யப்பட்டுள்ளதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பாரம்பரிய போகையை கொளுத்தி கொண்டாடினர்.

Tags : Kancheepuram Kanchipuram ,Bokib Festika ,Tirunalam Pongal ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...