தட்சனின் மகள் வசு என்பவருக்கு பிறந்தவர்கள் 8 பேர். இவர்களுக்கு அஷ்டவசுக்கள் எனப் பெயர் இடப்பட்டது. வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்து காமதேனுவை அஷ்ட வசுக்கள் கவர்ந்து சென்றனர். வசிஷ்டர் பூலோகத்தில் அஷ்டவசுக்கள் பிறக்குமாறு சாபமிட்டார். அதன் பிறகு அஷ்டவசுக்கள் பூலோகத்தில் மனிதப்பிறவிகள் எடுத்து இத்தலத்தில் காவிரி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர். ஆத்மநாதேஸ்வரரை காசியப மகிரிஷி வழிபட்டார்.இத்தலத்திற்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. காவிரி கரையில் உள்ள பத்தாவது திருத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற திருத்தலமாக உள்ளது. ஆத்மநாதேஸ்வரர் இங்கு சுயம்பு மூர்த்தியாக உள்ளார். சப்தம ஸ்தானத்தில் இது ஏழாவது ஸ்தலமாக உள்ளது. இங்கு உள்ள துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தலத்தில் உள்ள தலவிருட்சம் ஆலமரமாகும். இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், குரு, சனி, கேது கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது. இந்த தெய்வத்திற்கு வியாழன், சனி, செவ்வாய், கேது, சந்திரன் ஆகிய கிரகம் நாமாகரணம் செய்துள்ளது.
* தொடர்ந்து ஒன்பது பௌர்ணமி நாளன்று மூன்று நதி நீரை எடுத்து அதனுடன் பசும்பால் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் அரசியலில் வெற்றி பெறுவார்கள். முதலீடுகள் இரட்டிப்பாகும்.
* அஷ்டமி நாளில் பூசணிக்காயை இரண்டாகப் பிளந்து கடுகு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி பைரவரை வழிபட்டு வந்தால் தீராத கடன் தீரும்.
* பிரதோஷ நாளில் கோயிலில் வில்வமரத்திற்கு பசும்பால் ஊற்றி வழிபட்டு வந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். குபேர சம்பத்து கிடைக்கும்.
* தொடர்ந்து எட்டு அமாவாசை அன்று கடுகு எண்ணெயில் சப்பாத்தி செய்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து நாய்களுக்கும் காகங்களுக்கும் உணவளித்தால் அமானுஷ்ய விஷயங்களில் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
* ஏழரைச் சனியில் இருப்பவர்கள் இந்த திருத்தலத்தில் கடுகு எண்ணெய் தானம் செய்தால் சனி தோஷங்கள் குறையும். மேலும், பூசணிக்காயில் இரண்டாகப் பிளந்து கடுகு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷம் குறையும்.
* ஜாதகத்தில் சனி – கேது மற்றும் சூரியன் – கேது தோஷம் உள்ளவர்களுக்கு, உத்தியோகம் மற்றும் வளர்ச்சியில் பாதிப்புகள் இருந்துகொண்டே இருக்கும் இவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் அந்த தோஷங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம்.
*குழந்தை வரம் மற்றும் திருமண வரம் தரும் ஈஸ்வரராக ஆசிர்வதிக்கிறார்.
எப்படி செல்லலாம்: தஞ்சாவூரி லிருந்து (17 கி.மீ) கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் திருவாலம் பொழில் உள்ளது.
