×

கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 13 பேர் கைது

 

மாட்ரிட்: பிரேசில் நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு உப்புக்குள் மறைத்து கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃபில்லில் சரக்கு கப்பலில் இருந்த 300 மூட்டைகளில் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உப்புக்குள் மறைத்து கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் போதைப்பொருளை ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்த கொகைன் போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும். ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளை கடத்திய கப்பலில் இருந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். கப்பலில் எரிபொருள் தீர்ந்ததால் கடலோர காவல் படையினர் கொகைனுடன் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்துச் சென்றனர்.

Tags : Madrid ,Brazil ,Europe ,TENERIFIL ,SPAIN'S CANARY ISLANDS ,SALT ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...