×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 

சென்னை: சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,000 வசூல். சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக ரூ.1,100 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,500 வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்து கட்டணங்கள் விடுமுறை காலங்களில், குறிப்பாக கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்ற நேரங்களில் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை-மதுரை போன்ற வழித்தடங்களில் வழக்கமான கட்டணம் ரூ.600-800 ஆக இருக்கும் நிலையில், அது ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது, போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்தாலும், கட்டண உயர்வு தொடர்கிறது

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்கள் 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறைதான். சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க ஜனவரி 10-ம் தேதியே பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல வழக்கமாக ரூ.1,800 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.4,200 வசூல். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல வழக்கமாக ரூ.900 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.1,500 வசூல். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ.4,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Omni ,Pongal festival ,Chennai ,Ko ,Madurai ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!