டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சி(பி.என்பி) யின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி வங்கதேசம் திரும்பினார்.
இந்நிலையில் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கலிதா ஜியா டிசம்பர் 30ம் தேதி உயிரிழந்தார்.இந்நிலையில் கட்சியின் நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய தலைவராக தாரிக் ரஹ்மானை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
