- டாஸ்மாக்
- சென்னை
- Tasmak
- திருவள்ளாவர் தினம்
- குடியரசு தினம்
- வடலூர் வல்லார் நினைவு தினம்
- திருவள்ளுவர் தினம்
- குடியரசு
சென்னை: திருவள்ளுவர் தினம்(ஜன.16), குடியரசு தினம்(ஜன.26), வடலூர் வள்ளலார் நினைவு தினம்(பிப்.01) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில்; “வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை). 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை (Dry Day) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் முடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து காட மேற்பார்வையாளர்கள்/விற்பனையாளர்கள்/உதவி விற்பளையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
