கோயில் திருப்பணிகளுக்கு ரூ.6.50 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி, ஜன. 26: ராஜபாளையம் அருகே தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஜமீன் கொல்லங்கொண்டான் வடகாசி அம்மன் கோயில், ராஜபாளையம் அருகே விஸ்வகர்மா, தேவர், முதலியார், பிள்ளைமார் சமூகத்திற்குத் பாத்தியப்பட்ட அயன் கொல்லங்கொண்டான் கருமாரியம்மன் கோயில், ராஜபாளையம் கவுண்டர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவதானம் ஒன்னம்மாள் தொட்டராயல் கோயில், ராஜபாளையம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துசாமிபுரம் காளியம்மன் கோயில், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கற்குவேல் அய்யனார் கோயில், ராஜபாளையம் அருகே தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சொந்தமான தெற்கு மலையடிப்பட்டி அம்பேத்கார் நகர் தங்கமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்கு தலா ரூ.1.லட்சத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

வத்திராயிருப்பு காளியம்மன் நொண்டி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக பணிக்கு ரூ.20ஆயிரம், திருத்தங்கல் டாக்டர் ராதாகிருஷ்ணன் காலனியில் செல்வ விநாயகர் கோயில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா பணிக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அமைச்சர் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜபாளையம் அதிமுக  ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், மாரியப்பன், நகர செயலாளர்கள் ரானா பாஸ்கரராஜ், பொன்சக்திவேல், மேற்கு மாவட்ட  அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், பால்கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ்   உடனிருந்தனர்.

Related Stories: