பெரம்பலூர், ஜன.9: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக்கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 நாள் திருச்சி முகாம் செல்ல உள்ள 50 அரசு உயர்,மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் செல்லும் போருந்துகளை மாவட்ட கலெக்டர் மிருணாளினி கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 நாள் திருச்சி முகாம் செல்ல உள்ள 50 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் செல்லும் போருந்துக்களை நேற்று (8ம்தேதி) காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து மாவட்ட கலெக்டர் மிருணாளினி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை, பெரம்பலூர் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருச்சிக்கு 2 நாள் இயற்கை முகாம் சுற்றுலா புறப்பட்டனர்.
இதில் 10 அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து 50 மாணவர்களுடன் 10 பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள பறவைகள் பூங்கா, முக்கொம்பு வண்ணத்துப் பூச்சி பூங்கா மற்றும் கல்லணை ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் உடனிருந்தனர்.
